சவுதியில் உடல் ஊனமுற்ற நபருக்கு மரண தண்டனை: அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Published On Monday, 29 May 2017 | 13:18:00

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உடல் ஊனமுற்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியில் கடந்த 2012-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இப்போராட்டத்தில் உடல் ஊனமுற்றவரான Munir al-Adam(23) என்பவரும் பங்கேற்றுள்ளார்.
போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி நடத்தியுள்ளனர். அப்போது, பொலிசாரால் கைது செய்யப்பட்ட உடல் ஊனமுற்ற வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
மேலும் வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு இவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் இத்தீர்ப்பிற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
வாலிபர் உடல் ஊனமுற்றவர் என தெரிந்திருந்தும் அவரை பொலிசார் கடுமையாக சித்ரவதை செய்ததற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில் வாலிபரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் இந்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம் வாலிபரின் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
சமீபத்தில் சவுதி அரேபியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் சவதியின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
வாலிபரின் மேல் முறையீட்டு வழக்கும் தள்ளுடி ஆனதால் சவுதி மன்னரான சல்மானுக்கு பொது மன்னிப்பு கோரி வாலிபர் கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved