முஸ்லிம் பெண், போலீசால் கற்பழிப்பு! நோன்பு நோற்றிருந்த நிலையில் ஏற்பட்ட அவலம்

Published On Wednesday, 31 May 2017 | 21:06:00

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்தியா உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் பெண் பயணி ஒருவர் ரெயிலில் வைத்து ரெயில்வே காவல்துறை கான்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான மீரட்டை சேர்ந்த அந்த பெண் லக்னோ - சண்டீகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கமல் சுக்லா என்ற 24 வயது எஸ்கார்ட் காண்ஸ்டபிள் அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். வன்புணரப்பட்ட பெண் ரமலான் நோன்பு வைத்திருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கமல் சுக்லா என்ற எஸ்கார்ட் காண்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கேசவ் குமார் சவுத்ரி தெரிவிக்கையில், "பாதிக்கப் பட்ட பெண் சாதாரண கோச்சில் பயணம் மேற்கொண்டுள்ளார். ரமலான் நோன்பு வைத்திருப்பதால் சாதாரண கோச் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தவே, ரிசர்வ்ட் கோச் கேட்டுப்பெற முயற்சித்துள்ளார். இதனை அறிந்த கமல் சுக்லா. அவருக்கு உதவுவதாக கூறி சந்தப்பூர் ரெயில்வே ஸ்டேஷன் வந்ததும் ரிசர்வ்ட் கோச்சுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சிலரை வேறு இடத்திற்கு போகுமாறு கூறியுள்ளார். உடன் கோச் கதவை பூட்டிவிட்டு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை கண்ட மற்ற பயணிகள் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கி கிடந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். மேலும் காண்ஸ்டபிளை பிடித்த பயணிகள், ரெயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். " என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பதவியேற்றது முதல் கொலை கற்பழிப்பு என அதிகரித்துள்ளமையும் அது குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved