கள்ளக்காதலால் நடந்த விபரீதம்... மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!!

Published On Monday, 29 May 2017 | 13:38:00

தமிழ்நாட்டில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாரத் (34), இவர் மனைவி மோனிஷா (30) 7 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஜெனித் அஸ்வின் (5) என்னும் மகன் உள்ளான்.

பாரத்துக்கு அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மோனிஷா அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார்.

இதனால் கணவன் மற்றும் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மோனிஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள அவரை கொலை செய்ய பாரத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வீட்டில் இருந்த ஒயரை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மோனிஷாவின் கழுத்தை பாரத் இறுக்கினார், இதில் அவர் மயங்கி விட்டார். ஆனால், அவர் இறந்து விட்டதாக நினைத்த பாரத் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மோனிஷாவை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பயந்து போன பாரத் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் மோனிஷா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து பாரத்தை தேடி வந்த நிலையில், அவர் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved