Breaking News

பாதிக்கப்பட்ட மக்களுக்காக முஸ்லிம்கள் அனைவரையும் பிரார்த்திக்குமாறு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுப் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் சுகநலத்திற்காகவும் மரணித்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
புனித நோன்பு மாதத்தில் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற அடிப்படைத் தேவையாக காணப்படும் பொருட்களை இன மதம் பாராது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
இந்த மாதத்தில் இவ்வுதவி இறைவனிடத்தில் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, புனித நோன்பு மாதத்தில் முஸ்லிம்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டோரிடமிருந்து எம்மை பாதுகாக்கவும், நாட்டில் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும், புரிந்துணர்வும் ஏற்படும் வகையிலும் இப்புனித நோன்பு நாளில் அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

No comments