Wednesday, 24 May 2017

ஈரானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்!! பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்

ஈரானுக்கு தொழிலுக்காக சென்றிருந்த விஜயகுமார் பிரசன்னாத் என்ற 23 வயதுடைய இளைஞரை கடுமையாக தாக்கி கொலை செய்து அவரின் முக்கிய உடற் பாகங்களை அகற்றி பின்னர் அவரின் உடலத்தை இலங்கைக்கு அனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நீர்க்கொழும்பு மாவட்ட பொது மருத்தவமனையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரியவந்துள்ளது.
உடலின் பல முக்கிய உடற் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளமையால் மரணத்திற்காக காரணத்தை அறியமுடியாதுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , முல்லைத்தீவு , அலம்பிள்ளை பகுதியை சேர்ந்த உயிரிழந்தவரின் தந்தையான 57 வயதுடைய டபில்யூ.செல்வநாயகத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: