சீரற்ற காலநிலையால் குடிநீர் பிரச்சினையா? உடனே இந்த இலக்கத்துக்கு அறிவியுங்கள்!

Published On Saturday, 27 May 2017 | 14:27:00

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிணங்க, 077-7724360, அல்லது 077-7891332 மற்றும் 071-4532222 ஆகிய இலக்கங்களுக்கு முறையிட முடியும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved