இலங்கை முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல் - அதிகம் பகிருங்கள்

Published On Monday, 29 May 2017 | 17:23:00

கடந்த சில நாட்களாக நிலவி வரும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். எதிர்பாராத தொடர் மழையும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், மலைச் சரிவுகளும் என்றுமில்லாதவாறு மக்களை பாதித்துள்ளன. உயிரிழப்புக்களும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அவ்வனர்த்தத்தின் பீதி இருந்துவருவதோடு முன்னெச்சரிக்கைகளும் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

காலநிலை மாற்றத்தின்  ஆரம்பம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அறிவித்து வந்ததுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக ஆரம்பக் கட்ட உதவி  நடவடிக்கைகள் செய்யப்பட்டன. இருப்பினும் பாதிக்கப்படடோர் தொகை கூடி அனர்த்தத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஜம்இய்யா வழமைபோன்று அனைத்து பள்ளிவாயல்களையும், பரோபகாரிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்ய முன்வருமாறு வேண்டுகொள் விடுத்ததுள்ளது. 

அதன் தொடராக இன்று ஞாயிற்றுக் கிழமை 28.05.2017 ஆம் திகதி  ஜம்இய்;யாவின் தலைமையகத்தில் கொழும்பிலுள்ள் பள்ளவாயல்களின் சம்மேளனங்கள் கூடி பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை ஜம்இய்யாவின் கிளைகளுடன் இணைந்து பினன்வரும் ஒழுங்கில் செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 

பொறுப்பேற்றுள்ள மஸ்ஜித் சம்மேளனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் 
கிருளப்பனை, வெள்ளவத்தை   களுத்துறை மாவட்டம்
தெஹிவளை  மாத்தறை மாவட்டம். 
கிரேன்பாஸ், தெமடகொடை  கேகாலை மாவட்டம்.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி இரத்தினபுரி மாவட்டம்.
மாளிகாவத்தை, கொம்பனி வீதி, வத்தளை   கம்பஹா மாவட்டம். 
புதுக்கடை, புறக்கோட்டை, மருதானை, மட்டக்குளிய  கொழும்பு மாவட்டம். 

இவ்வண்ணம்


அஷ்-ஷைக் எம்.எம்.அஹ்மத் முபாறக் 
பொதுச் செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா    
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved