எதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிமுகம் (படங்கள் இணைப்பு)

Published On Sunday, 28 May 2017 | 10:29:00


ரைட் சகோதரர்கள் விமானம் எனும் பெயரில் முதன்முதலாக கண்டுபிடித்த பறக்கும் கூண்டை பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் பார்த்திருப்பீர்கள் ஆனாலும் ரைட் சகோதரர்களுக்கு (Wright Brothers) முன்னும் பலர் பல வடிவங்களை தயார் செய்து பறக்க முயற்சித்துள்ளனர், அந்த முயற்சியில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முயன்றது சற்று வானில் பறக்க வேண்டும் என்பது மட்டுமே.

அந்த முன்முயற்சியாளர்களுக்கு இன்றைய நவீன விமானங்களை தரிசிக்கும் வசதி ஒருமுறை வழங்கப்பட்டால்.... என்ற ஒருபோதும் நடவாத கற்பனைக்கு முற்றுப்புள்ளியிட்டு நிகழ்காலதிற்குள் நுழைவோம்.

உலகின் பல்வேறு விமான நிறுவனங்கள் சக போட்டியாளர்களை சமாளிக்க டிக்கெட் விலை குறைப்பு செய்தும், லாபம் குறைவான சில தடங்களில் சேவைகளை ரத்து செய்தும் விமான சந்தையில் நிலைத்திருக்க முயலும் சூழலிலும் அபுதாபியின் எதிஹாத் விமான நிறுவனம் பல்வேறு உயர் வசதி விமானங்களை அறிமுகம் செய்த கொண்டே உள்ளது.

தற்போது எதிஹாத் விமான சேவையில் 10வது விமானமாக இணைந்துள்ள சூப்பர் ஜம்போ ஜெட் விமானமான ஏர்பாஸ் A380 ரக விமானத்தில் 9 முதல் வகுப்பு 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் வீடுகள், 70 பிஸ்னஸ் வகுப்பு ஸ்டுடியோ டைப் வீடுகள், ஒரு லாபி லவுன்ஞ் மற்றும் 415 எகனாமி வகுப்பு இருக்கைகள் என பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

எதிஹாத் விமான நிறுவனம் ஏற்கனவே லண்டன், நியூயார்க், சிட்னி போன்ற தடங்களில் சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் 380 ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில் கூடுதலாக பாரீஸிற்கும் சேவையை துவங்கவுள்ளது. எதிஹாத் நிறுவனத்தின் இந்த விமானமே; உலகின் முதல் பிரம்மாண்ட பயணிகள் போக்குவரத்து விமானம் என்ற பெயரை தற்போதைக்கு கைப்பற்றியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

 
 
 
 
 
 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved