கத்தாரில் கர்வா பஸ்லைப் பாவிப்பவரா நீங்கள்? ஒரு ஸ்மார்ட் கார்ட் மூலம் பலர் பயணிக்கும் திட்டம் விரைவில்!

Published On Sunday, 28 May 2017 | 16:35:00

கர்வா பஸ்களில் ஒரு ஸ்மார்ட் கார் மூலம் பலர் பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தும் போது தான் பஸ் பாவனையாளர்களின் தொகையை அதிகரிக்கலாம் என்பதாக யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தற்போது உள்ள விதிமுறைகளின் படி ஒரு ஸ்மார்ட் கார்ட் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கின்றது. 
சில பஸ் பயணிக்கும் ரூட்களில் போதுமான அளவு பயணிகள் பஸ்களில் பயணிப்பதில்லை என்பதாக அண்மைய அறிக்கை ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் விடுமுறை தினங்களில் அதிகளவு பிரயாணிகள் பஸ்களைப் பயன்படுத்துகின்றனர். என்றாலும் ஒரு சிலர் ஸ்மார்ட் கார்ட் வைத்திருப்பதனால் ஏனையவர்கள் இதனை பயன்படுத்த இயலாமல் இருப்பதன் காரணமாக நிறையப் பேர் பஸ்ஸை பாவிப்பதில்லை என்பதாக கூறப்படுகின்றது. எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி ஒரு ஸ்மார்ட் கார்ட் மூலம் பலர் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தற்போது சந்தையில் 3 வகையான ஸ்மார்ட் கார்ட்கள் கிடைக்கின்றன. 
கிளஸ்சிகல் கார்ட் - விலை 30 றியால்கள். ஆனால் 20 றியால்களைப் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த கார்ட் றிசார்ஜ் பன்னுவதன் மூலம் தொடர்ந்து பாவிக்க முடியும். குறைந்த அளவு றீசார்ஜ் தொகை 10 றியால்கள். அதிக தொகை 300 றியால்கள். 100 றியால்கள் றீசார்ஜ் செய்யப்பட்டால் 10 றியால்கள் மேலதிகமாக (போனஸ்) வழங்கப்படும். கர்வா பஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது றீசார்ஜ் செய்யும் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாவது வகை • 24-hour limited card விலை 10/-  ியால்கள். கொள்வனவு செய்யும் தினத்தில் 24 மணித்தியாலத்துக்குள் இரண்டு முறை பாவிக்க முடியும். அதாவது இரண்டு பயணங்களுக்கு மட்டும். பஸ் சாரதிகளிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவது வகை • 24-hour unlimited card விலை 20/- றியால்கள். கொள்வனவு செய்த தினத்தில் 24 மணித்தியாலங்களுக்கு எத்தனை பயணங்களையும் மேற்கொள்ள முடியும். பஸ் சாரதிகளின் பெற்றுக் கொள்ளலாம்.
குறைந்த வருமானமுள்ளவர்கள் தான் அதிகம் பஸ்லைப் பாவிக்கின்றார்கள். கூட்டமாக வந்து இவ்வாறு விலை கொடுத்து வாங்குவதை விட கூட்டமாக டெக்ஸிகளில் செல்லுவத  அவர்களுக்கு கட்டணம் குறைவாக இருப்பதனால் பஸ்களில் பயணிக்காமல் டெக்ஸிகளில் பயணிக்கின்றனர்.  ஆகவே ஒரு ஸ்மார்ட் கார்ட் மூலம் பலர் பயணிக்கும் திட்டத்தை ஆரம்பித்தால் அதிகம் பயணிகள் பஸ்ஸை பாவிப்பார்கள் என்பதாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவனையில் உள்ள குறைந்த பட்ட பஸ் கட்டணம் 2.5 றியால்கள் மட்டுமேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆங்கிலத்தில  - கட்டார் டே
தமிழில் உண்மையின் பக்கம்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved