Breaking News

மாட்டிறைச்சி சாப்பிடுவதில் எந்த நாடுகள் முன்னணியில் உள்ளன? இதோ பட்டியல்!

சர்வதேச அளவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளன.
சர்வதேச அளவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் எந்த நாட்டு மக்கள் முன்னணியில் உள்ளனர் என்பது குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் 2016-ம் ஆண்டில் மட்டும் 129.5 பில்லியன் பவுண்ட் எடையுள்ள மாட்டிறைச்சியை உலக மக்கள் சாப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே போல் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான உருகுவே இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் மாட்டிறைச்சியை அதிகளவில் சாப்பிடும் மக்கள் வசிக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ!
  1. உருகுவே
  2. அர்ஜெண்டினா
  3. ஹோங்கோங்
  4. அமெரிக்கா
  5. பிரேசில்
  6. பரகுவே
  7. அவுஸ்ரேலியா
  8. கனடா
  9. கசகஸ்தான்
  10. சிலி
இதே பட்டியலில் இந்தியா 52-வது இடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 53 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments