அபுதாபி சாரதிகள் கவனத்திற்கு! ரமலான் நோன்பினை முன்னிட்டு அபுதாபியில் புதிய போக்குவரத்து விதிகள்!

Published On Tuesday, 30 May 2017 | 04:26:00

(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்)  ரமலான் நோன்பு மாதத்தில் விபத்துகளை தவிர்க்க அதிரடியான வீதி கட்டுபாட்டு விதிகளை அபுதாபி நகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது. 

    அபுதாபி நகரத்தின் ரோந்து மற்றும் வீதி போக்குவரத்து துறை அதிகாரி இதற்கான உத்தரவை அபுதாபி நகரம் முழுவதும் பிறப்பித்துள்ளார். 

  # ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை அபுதாபி நகர வீதிகளில் செல்லக்கூடாது. 

  # இதே நேரங்களில் 50 பயணிகளுக்கு மேல் பொது போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்கக்கூடாது.  

  # இதே விதிமுறைகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அபுதாபி நகரத்தில் வாகனங்கள் செயல்படவேண்டும்.  

  இதுகுறித்து அபுதாபி நகரத்தில் உள்ள அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையும் மற்றும் நேரடியான அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved