ஜெனரேட்டர் மூலம் மின்சாரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு

Published On Monday, 29 May 2017 | 16:37:00

மாத்­தறை பிர­தே­சத்­தில் மின் விநி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்­டி ­ருந்த வேளை­யில் ஜென­ரேட்­டர் மூலம் மின்­சா­ரத்­தைப் பெற்ற குடும்­பம் ஒன்­றில் 4 பேர் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட் ட­னர்.

இந்­தத் துய­ரச் சம்­ப­வம் மாத்­தறை – ரொட்­டும்­பப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை இடம்­பெற்­றது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.


குடும்­பத்­த­லை­வர், அவ­ரது மனைவி, மகன் மற்­றும் மகள் ஆகி­யோரே இவ்­வாறு சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­ட­னர்.

“வெள்ள இட­ரால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு மின் விநி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் குறித்த குடும்­பத்­தி­னர் கடந்த 26ஆம் திகதி இரவு ஜென­ரேட்­ட­ரைப் பயன்­ப­டுத்தி மின்­சா­ரம் பெற்­றுள்­ள­னர். அன்­றை­ய­தி­னம் இரவு நித்­தி­ரைக்­குப் போன இவர்­கள் நால்­வ­ரும் காலை­யில் படுக்­கை­யில் உயி­ரி­ழந்­தி­ருந்­த­னர்.

ஜென­ரேட்­ட­ரி­லி­ருந்து வெளி­யான நச்­சு­வா­யுவை இவர்­கள் சுவா­சித்­தி­ருக்­க­லாம் என்று ஆரம்ப விசா­ர­ணை­க­ளில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் தொடர்­பில் ரொட்­டும்ப பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved