ஷார்ஜாவில் சாலையின் குறுக்கே சென்ற 3,943 பேர் மீது அபராதம் விதிப்பு

Published On Sunday, 28 May 2017 | 05:21:00


அமீரகத்தில் ஜீப்ரா கிராஸிங் (Zebra Crossing) எனப்படும் பாதசாரிகள் சாலைகளை (Pedestrian Passing) கடக்குமிடம் தவிர்த்து பிற இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக பலரும் கடப்பதால் (Jay Walking) பல சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இதற்காக அவ்வாப்போது பல விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன என்றாலும் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

இந்நிலையில், ஷார்ஜாவில் 2017 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 'ஜே வாக்கர்ஸ்' (Jaywalkers) எனப்படும் அனுமதியில்லாத இடத்தில் சாலையை குறுக்காக கடப்பவர்கள் 3,943 பேர் பிடிபட்டு தலா 200 திர்ஹம் அபராதம் செலுத்தியுள்ளனர் என்றும் இவர்கள் மீது பொருப்பற்ற முறையில் பிறருக்கு விபத்து மற்றும் காயங்கள் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளல் போன்ற ஷரத்துக்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களிலும் நிறுத்தப்படுவார்கள் என ஷார்ஜா போலீஸ் அறிவித்துள்ளது.

அதேபோல், ஜீப்ரா கிராஸிங் பகுதியில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை தந்து வாகனங்களை நிறுத்தாத ஓட்டுனர்கள் மீது 500 திர்ஹம் மற்றும் 6 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும்.

பாதசாரிகள் நடந்து செல்லும் ஜீப்ரா கிராஸிங் மீது பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக வாகனங்களை நிறுத்துவோர் மீது 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் அல்லது பாதசாரிகளின் நடமாட்டத்தின் மீது தடையேற்படுத்துவோர் மீது 200 திர்ஹம் மற்றும் 3 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கவும் அமீரக தேசிய போக்குவரத்து சட்டம் இடமளிக்கின்றது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved