Breaking News

அமீரகத்தில் கடும் வெப்பம் - கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் ஜூன் 15 முதல் துவக்கம் !


அமீரகத்தில் கோடையில் தகிக்கும் வெயிலில் புறவெளியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்ற சட்டம் கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை பகல் 12.30 முதல் மாலை 3 மணிவரை திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு தர வேண்டும் என்றும், மீறும் நிறுவனங்கள் மீது ஒவ்வொரு தொழிலாளர் மீதும் தலா 5,000 திர்ஹம் என (அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் எனும்போது) அதிகப்பட்சம் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அந்த நிறுவனத்தின் தரம் குறைக்கப்படுவதுடன் சில வேளை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படுமென அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments