ஓமனில் கடும் சூடு, பகல் 12.30 - மாலை 3.30 வரை கட்டாய ஓய்வு, மீறினால் அபராதம், சிறை தண்டனை!

Published On Saturday, 27 May 2017 | 22:53:00


ஓமனில் வெயில் காலத்தில் வெப்பநிலை சுமார் 40 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். மேலும் புனிதமிகு ரமலான் மாதமும் துவங்கவுள்ளதாலும் எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய) 3 மாத காலத்திற்கு கட்டாய பகல் நேர இடைவேளையை ஓமன் அரசின் மனித ஆற்றல் துறை அமைச்சகம் (Ministry of Manpower) அறிவித்துள்ளது.

இதன்படி, கட்டிடத் தொழில் உட்பட திறந்தவெளியில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ள அனைத்து வகை தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பகல் 12.30 முதல் மாலை 3.30 வரை கட்டாய ஓய்வு தர வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது 100 முதல் 500 ஓமன் ரியால் அபராதமும் 1 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு சோதனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொள்வர். கட்டாய பகல் நேர இடைவேளை சட்டத்தை மீறுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க 80077000 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஓமனில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved