Breaking News

அனர்த்தத்தினால் இதுவரை 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்வு! 122 பேர் பலி

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையின் காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 122 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 100 பேரளவில் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 50 பேர் வரையானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்களின் 187 வீடுகள் முற்றாக சேதமுற்றுள்ளன. 1600க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
அத்துடன் தற்போதைய நிலையில் சுமார் ஒருலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து லட்சம் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைத்தங்கல் முகாம்களில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

No comments