Monday, 27 March 2017

WWE பிரபல விளையாட்டு வீரர் "The Undertaker" இனி விளையாட மாட்டாராம் - காரணம் இது தான்!

WWE மல்யுத்த போட்டி வீரர் அண்டர்டேக்கருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை விரைவில் நடைபெறவுள்ளது.
WWE மல்யூத்த போட்டிகளுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அதில் பங்கேற்கும் அண்டர்டேக்கர் என்னும் வீரருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
அவருக்கு சமீபகாலமாகவே இடுப்பை சுற்றி வலி இருந்து வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தற்காலிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இதனிடையில் அவருக்கும் மீண்டும் வலி ஏற்ப்பட்டது.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய அளவிலான இடுப்பு மாற்று ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
விரைவில் அண்டர்டேக்கருக்கு ஆப்ரேஷன் நடைப்பெறும் என தெரிகிறது.
அவர் உடலில் பிரச்சனை அதிமாக உள்ளதால் அவர் இனி மல்யூத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லாமல் கூட போகலாம் என கூறப்படுகிறது.

Author: verified_user

0 comments: