Breaking News

துபாயின் பிரசித்தி பெற்ற லாம்சி பிளாசாவில் தீ விபத்து !

அதிரை நியூஸ்: மார்ச்-04
துபாயின் பிரசித்தி பெற்ற வணிக வளாகமாகவும், லேண்ட்மார்க் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் லாம்சி பிளாஸாவில் (Lamcy Plaza) நேற்று காலை 11.15 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. நான்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

லாம்சி பிளாசா மாடியில் பொருத்தப்பட்டிருந்த குளிர்ச்சாதன கருவிகளின் காற்றாடியில் இருந்து தீ பற்றி பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றாலும் முழுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இத்தீவிபத்தால் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்படும் போது குறைவான வாடிக்கையாளர்களே அங்கிருந்ததால் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர் என்றும் இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது என்றும் துபை தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments