Sunday, 19 March 2017

அதிர்ச்சித் தகவல் - மனித வியாபாரம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் மீண்டும் இலங்கை!

நான்காவது தடவையாகவும் மனித வியாபாரம் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை மாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலைமையிலிருந்து இன்னும் சற்றேனும் கீழ் இறங்கினால், நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் பட்­டி­ய­லிலும் எமது நாட்டின் பெயரும் இடம் பெற்­றுள்­ளது.
நாடு என்ற வகையில் இலங்கை இந்த மனித வியா­பா­ரத்தை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றதா அல்­லது தொடர்ந்து அதே நிலை­மையில் இருக்­கின்­றதா என்­பதை ஐக்­கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Author: verified_user

0 comments: