Monday, 27 March 2017

மது அருந்த தடை போட்ட மனைவி - மின்சார தூணில் ஏறி ஆர்ப்பாட்ட செய்த கணவன் - இலங்கையில் தான்!

மது அருந்த மனைவி மறுப்பு தெரிவித்தமையால், கணவன் விநோதமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
குருவிட்ட, எனசல்தொல பகுதியில் மது அருந்த மனைவி மறுப்பு தெரிவித்தமையால் நபர் ஒருவர் மின்சார தூணின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார்.
இதனை அறிந்து கொண்ட குருவிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர், சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கீழே இறக்கியுள்ளனர்.
இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் தொடர்பில் பொலிஸார் தகவல் அறிந்த பின்னர் அவரை மின்சார தூணில் இருந்து இறக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அவரை பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மது பானம் அருந்துவதற்கு இடமளிக்காதமையினால் இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
கீழே இறக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று செயற்படுவதால், அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Author: verified_user

0 comments: