Sunday, 26 March 2017

ஹெல்மட் (தலைக்கவசம்) பாவனை தொடர்பில் சில பயனுள்ள தகவல்கள் - அதிகம் பகிருங்கள்

தலைக்கவசம் என்றாலே மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் தான் அதிகம். விருப்பத்துடன் அணிபவர்கள் ஒரு சிலரே. 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கர வாகனத்தால் என்கின்றனர். ஆனால் தரமில்லாத ஹெல்மெட் வாங்கினாலும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும்.

ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் பொய். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுகாப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும்.

பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சத்தம், வாகனங்களின் இரைச்சல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

தூசுகள், மார்கழி மாத குளிரிலிருந்தும் மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காக்கிறது.

ஹெல்மெட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
  • உங்கள் தலையினை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை மட்டும் வாங்குங்கள். தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்தாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடாது.
  • நீங்கள் வாங்கும் தலைக்கவசம் உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவற்றில் எவ்விதமான உறுத்தல்களும் இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும்.
  • ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. ஸ்ட்ராப்பில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருத்தல் வேண்டும்.
  • பூச்சுசெய்யப்பட்ட முன்புற கண்ணாடிகள் இரவு மற்றும் வெளிச்சம் குறைந்த வேளைகளில் சிறப்பான காட்சியினை காட்டுவதில் தடுமாறும். மேலும் கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். 
  • மிக கடினமான மேற்புற ஓடு அமைந்திருத்தல் அவசியம்.
  • ஹெல்மெட்டின் முன்பகுதி கண் புருவத்துக்கு ஒரு அங்குலம் மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கண்களை மறைக்கிற பிளாஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும்.
  • தர முத்திரை அவசியம் (ISA, SLS) போன்றன
  • எடை அதிகமுள்ள ஹெல்மெட்டைத் தவிர்த்துவிடுங்கள்.


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல. வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. 

சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள். வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள். என்றும்.. எப்போதும். 

Author: verified_user

0 comments: