Tuesday, 28 February 2017

பெப்ரவரி 30ம் திகதி கோர்ட்டில் ஆஜராகுக – கொழும்பு ட்ராபிக் பொலீஸ், “தடகொல” கொடுத்து அதிரடி

சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக முழுமையான பொலிஸ் துறை மீதும் அதிருப்பதி நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் கசுன் என்பவர் பொரளையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக பொலிஸார் அவரை நிறுத்தியுள்ளனர்.
குற்றச்சாட்டிற்கு அபராதம் தாள் வழங்கி பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெப்ரவரி மாதம் 30ஆம் திகதியை குறிப்பிட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் 30 ஆம் திகதி நீதிமன்றம் செல்வது எப்படி என்பதே தற்போது அனைவரினதும் கேள்வியாகியுள்ளது.



Author: verified_user

0 comments: