Sunday, 26 March 2017

120 நாடுகளில் ஒரே நேரத்தில் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் தெரியுமா?

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஓஎஸ்-இல் செயல்படும் வகையில் மாறியுள்ளது. தற்போது நோக்கியா 6 சீனாவில் மட்டும் விற்பனையாகிறது. நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.
இப்போது ஹெச்எம்டி நிறுவனம் 120 நாடுகளில் ஒரே நேரத்தில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 , நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் 5 இன் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே(1280×720 pixels), குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 பிராஸசர், 2ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 2650 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் Android 7.0 Nougat ஓஎஸ் இல் இயங்கும். இதில் 2 சிம் போடும் வசதி உள்ளது. இதன் விலை ரூ.9,800 என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் கோல்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர், 2ஜிபி ரேம், 16 ஜிபிஇன்பில்ட் ஸ்டோரேஜ், 5.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே( 1280×720 pixels), 13 எம்பி பின்பக்க கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, பிங்கர் பிரிண்ட் சென்சார், 3000 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ.13500 என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் கோல்காம் ஸ்னாப்டிராகன் 430soc பிராஸசர், 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 5.5இன்ச் புல் ஹெச்டி டிஸ்பிளே( 1280×720 pixels), 16 எம்பி பின்பக்க கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவுன் f/2.0 அப்ரேச்சர், ,3000 எம்ஏஹெச் பேட்டரி, பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ.16000 என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Author: verified_user

0 comments: