Breaking News

மனைவியின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்திற்கு சென்ற கணவன்: ஏன் தெரியுமா?

ஜார்கண்டில் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ள கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டின் சாட்சிலா பகுதியைச் சேர்ந்தவர் பூபன் மார்டி(38). இவர் தன்னுடைய மனைவியான சாருமனியின் தலையை துண்டாக கோடாரியை கொண்டு வெட்டி, தலையை ஒரு துணிப்பையில் வைத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், பூபன் மார்டிக்கும் அவரது மனைவியான சாருமனிக்கும் கடந்த ஞாயிறு அன்று கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது, சாருமணி வேறொரு ஆணுடன் பழக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் சென்று கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த மார்டி கோடாரியால் தன் மனைவியில் தலையை துண்டாக வெட்டியுள்ளார். இச்சம்பவத்தால் சாருமணி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின் அவர் காவல்நிலையத்திற்கு வந்து நடந்தவற்றை கூறியுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட சாருமனியின் உடன் அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள வயலில் கிடந்துள்ளது. மேலும் சாருமணியை கொலை செய்ததற்கு வேறேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

No comments