Breaking News

மலையாளிகளுக்கு அதிஷ்டம்! 69 திர்ஹத்தில் ஷார்ஜா - கேரளா விமானப் பயணம் !


ஷார்ஜாவிலிருந்து இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கேரளாவின் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகளுக்கு மட்டும் சிறப்பு அதிரடி குறைந்த விலை ஒன்வே டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய விமானம் தென்னிந்திய உணவு வசதிகளுடன் இயக்கப்படவுள்ளதென்றும் ஏர்போர்ட் வரிகள் தவிர்த்து அனைத்தும் கட்டணமும் இதில் அடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்பு கட்டணத்தில் மார்ச் 20 முதல் கோழிகோட்டிற்கும், ஏப்ரல் 9 முதல் திருவனந்தபுரத்திற்கும் இச்சலுகை கட்டண பயணச்சீட்டில் பயணிக்கலாம் என்றாலும் இச்சலுகைக்கான கால அளவு குறிப்பிடப்படவில்லை.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments