கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு (Photos)

கட்டை விரல் நகத்தில் அமரக்கூடிய அளவு நான்கு புதிய தவளை இனங்கள் இந்தியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகச்சிறிய தவளைகளான இவைகள், காடுகளில் வாழக்கூடியவை, இரவில் பூச்சிகளைப் போன்று ஒலிகளை எழுப்பக்கூடியவை.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏழு இரவுத்தவளை இனங்களில் மூன்று, பெரிய அளவைக் கொண்ட இனங்களாகும்.
இந்தியாவின் மேற்கு கரைக்கு இணையாக இருக்கும் மலைப்பகுதி, பல அபாயகரமான செடிகள் மற்றும் விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் காடுகளில் பல நாட்கள் நடைபெற்ற ஆய்விற்கு பிறகு விஞ்ஞானிகள் இந்த புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
“இந்த சிறிய தவளைகள் ஒரு நாணயத்திலோ அல்லது கட்டை விரல் நகத்திலோ கச்சிதமாக அமரக்கூடியவை” என இந்த புதிய இனத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொனாலி கார்க் தெரிவித்துள்ளார்.
நைட்டிபிட்ரிக்கஸ் என்னும் இந்த இரவுத் தவளை இனத்தில், முன்னதாக 28 இனங்கள் இருந்தன; அதில் மூன்று இனங்கள் 18 மில்லிமீட்டருக்குக் குறைவானதாக, மிகவும் சிறிய தோற்றம் கொண்டவையாக உள்ளன.
இந்த புதிய இனங்கள் அதன் டிஎன்ஏ, உடற்கூறு அமைப்புகள் மற்றும் ஒலியின் பரிமாணங்கள் ஆகியவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தவளைகள் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்டவை; 70-80 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றிய பழமையான இனமாக இவை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
3 2

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget