ஏழு வயது சிறுமிக்கு 2 உயர் வகுப்பு மாணவிகளால் அரங்கேறியுள்ள கொடூரம் - பதறவைக்கும் பின்னணி...

இந்தியா - டெல்லியில் பாடசாலை ஒன்றில் 7 வயது சிறுமிக்கு இரண்டு உயர் வகுப்பு மாணவிகள் மாதக் கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

டெல்லி மோதி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் படித்து வரும் 7 வயது மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் இந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

எனது பாடசாலையில் படிக்கும் 2 உயர் வகுப்பு மாணவிகள் மதிய உணவு இடைவேளையில் என்னை யாரும் இல்லாத அறைக்கு அழைத்துச் செல்வார்கள்.

அங்கு வைத்து எனக்கு ஏதோ போதை வஸ்து கொடுப்பார்கள். பின்னர் என்னிடம் அவர்கள் தவறாக நடந்து கொள்வார்கள். இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். இது பல மாதங்களாக நடந்து வருகிறது என்றார்.

இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததுடன் இது குறித்து பொலிஸில் புகார் அளித்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களில் ஒருவர் மேஜர், ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget