இலங்கையில் இனி 15 - 16 வயதுடையவர்கள்ய வதுடையவர்களும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக 15 தொடக்கம் 16 வயதுடையவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
அவ்வாறு பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலகங்களில் சென்று முழுமையான தகவலை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மாணவர்களின் விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து பாடசாலை அதிபர்கள் அவற்றை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவது அவசியமாகும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget