HIV தொற்றினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பணிப்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

Published On Friday, 20 January 2017 | 22:03:00

எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டதாக கூறி தொழிலை இழந்த விமான ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகமே இதற்கு பொறுப்பு என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தான் குறித்த விமான சேவையில் கடந்த ஒக்டோபர் மாதம் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்த்து விசாரணை நடத்துவது அவசியம் என கூறிய நீதிமன்றம், எதிர்ப்புகள் இருப்பினும் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனுதாரர் தரப்பினரின் சட்டத்தரணி, இது மிகவும் முக்கியமான வழக்காகும். தொழிலின் போது எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்திற்கு வரும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved