கட்டாருக்கு அடிக்கடி சென்று வருபவரா நீங்கள்! கட்டாயம் E-GATE பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

Published On Saturday, 14 January 2017 | 10:59:00

கட்டார் ஹமாட் சர்வதேச விமான நிலைய மூடாக உட்செல்லல் மற்றும் வெளியேறுதலுக்கு இலத்திரனியல் வாயில்களை (E-GATE) என்று சேவை அறிமுகம் செய்து உள்ளது. குறிப்பாக சொல்வதெனில், விமான தாயகம் செல்லும் போதும், தாயத்திலிருந்து கட்டாருக்கு வரும் போதும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வரிசையில் நிற்க வேண்டும். அவ்வாறு வரிசையில் நிற்காமல் எமது அடையாளத்தை நாமாகவே உறுதிசெய்து விட்டு வெளியேறவும், உட்புகவும் செய்யப்பட்டுள்ள வழிமுறைதான் “E-GATE”
கட்டாரில் தற்போது பணியாற்றும் மற்றும் வசிக்கும் பதிவு அடையாள அட்டையுள்ள வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடைய 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அடிப்படை பதிவின்றி பயன்படுத்தும் வகையில் இந்த இலத்திரனியல் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருப்பதாக உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விலத்திரனியல் நுழைவாயில்களினூடாக மிக இலகுவாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் தேவையற்ற சனநெருக்கடியைக் குறைக்க முடிகின்றது என கட்டார் உள்விவகார அமைச்சு நம்பிக்கை தெரிவிக்கின்றது.
இத்திட்டத்திட்டம் தொடர்பில் ஹமாட் சர்வதேச விமான நிலைய அனுமதிபத்திர திணைக்கள பணிப்பாளர் கர்னல் மொஹமட் ரசீத் அல் – மஸ்ருய் (Mohamed Rashid al-Mazroui) கருத்து தெரிவிக்கையில், பதிவு அடையாள அட்டை இருப்பின் எவ்வித பதிவு மற்றும் கட்டணம் இன்றி விமான நிலையத்திற்குள் உட்செல்லவோ வெளியேறவோ முடியும் என்றும் அதற்காக ஈ வாயில் இல 19 உட்செல்வதற்கும் ஈ வாயில் இல 16 வெளியேறுவதற்கும் தற்போது பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உட்செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைவாகசெல்வதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த திணைக்களபணிப்பாளர், உட்செல்ல மற்றும் வெளியேற ஆகக்கூடியது 2 நிமிடங்கள் செலவாகும் என்றும் இப்புதிய முறையை பயணிகள் விளங்கிக்கொள்ளும் வகையில் அரபு மற்றும் ஆங்கில மொழியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: இந்த வசதியை பயன்படுத்த விரும்புபவா்கள் முதலில் செல்லுபான QATAR ID மற்றும் பாஸ்போர்ட்வுன் சென்று கட்டார் பாஸ்போர் ஆபிஸ் சென்று இந்த சேவையை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டும். இதற்காக சிறு தொகைப் பணம் அறிவிடுவதோடு QATAR ID ஐயும் E-GATE வசதியை உட்செலுத்தி மாற்றித் தரப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
QATAR தமிழ் போய்ஸ்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved