ஐரோப்பாவில் கடும் பனி! - உயிருடன் ஐஸ் கட்டியில் உறைந்து பலியான நரி !

Published On Monday, 16 January 2017 | 10:24:00


ஜெர்மனியில் தென்மேற்குப்பகுதியில் 'பிரைடின்ஜென்' (Fridingen) நகரம் அருகே ஓடும் ஆற்றின் பெயர் டனுப் (Danube River). இந்த ஆற்றுப்பகுதியில் தற்பொழுது நிலவும் கடும் குளிரால் நதிநீர் உறையத் துவங்கியுள்ளது.


இந்த டனுப் ஆற்றில் தவறிவிழுந்த நரி ஒன்று அப்படியே குளிரில் 'ஜல சமாதி' ஆகி ஐஸ் கட்டியுனுள் உறைந்து போயுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதேபோல் மான் ஒன்றையும், காட்டுப் பன்றி ஒன்றையும் ஐஸ் பாளங்களுக்குள் உறைந்த நிலையில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் இப்பகுதியில் வேட்டையாடி வரும் பிரேன்ஸ் ஸ்டெஹ்லே (Franz Stehle) என்பவர், மேலும், இந்த ஐஸ் நரியை தன்னுடைய ஹோட்டல் முன் மக்கள் பார்வைக்குள் வைத்து ஈர்த்தும் வருகிறார்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழைய பழமொழி, இப்போ எது செத்தாலும் காசுங்க!Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved