சவுதியில் செல்போன் சிம்கார்டு பயன்படுத்தும் வெளிநாட்டவா்கள் கவனத்திற்கு! அவதானமாக இருங்கள்

Published On Tuesday, 17 January 2017 | 12:42:00

ஃபிங்கர் ப்ரிண்ட் பதிவு செய்தால் தான் இனி உங்கள் சிம் பயன்படும், இல்லை என்றால் கனெக்‌ஷன் துண்டிக்கப்படும். 

இதனால் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படும் என்றாலும், கடும் சிரமங்களையும் சந்திக்க நேரிடும். சிம் கார்டு தொலைந்து விட்டால் உடனே போய் அதை ரத்து செய்ய வேண்டும், இல்லை என்றால் அந்த நம்பரை வைத்து வேறு வகையில் தவறான காரியங்களுக்கு யாரேனும் பயன்படுத்தினால், சிம்முக்குறிய நபர் தான் தண்டிக்கப்படுவார். 

அதே போல் இனி நெட் சிம் கார்டு பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனெனில் அதற்கும் கை ரேகை அவசியம் என மெசேஜ் வந்திருக்கு. சாதாரணமாக சவுதியில் ரீசார்ஜ் செய்வது கூட சுலபமில்லை, ஏன்னில் நம்ம ஊரில் பயன்படுத்துவது போல் கார்டை சுரண்டி ரகசிய நம்பரை பதிவேற்றினால் ரீசார்ஜ் ஆகிவிடுது போல் சுலபான காரியம் அல்ல, இங்கே ரீசார்ஜ் ரகசிய நம்பருடன் சவுதி அரசால் கொடுக்கப்பட்டு இருக்கும் இகாமா ஐடியின் நம்பரையும் பதிவு செய்தால் தான் ரீசார்ஜ் ஆகும். ஒருவர் சிம்மில் இன்னொருவர் ஐடி நம்பர் போட்டு ரீசார்ஜ் கூட செய்ய முடியாதளவுக்கு கடும் கட்டுப்பாடு உள்ளது. 

அப்படி இருக்கும் போது தற்போது கைரேகை பதிவு செய்ய சொல்வது இன்னும் கடுமையான விதிமுறைகளை தொலைதொடர்பு துறை விதித்துள்ளதை காட்டுகிறது. நம்ம ஊர்ல ஒரு சிம் கார்டு இல்லை பத்து சிம் கார்டு கூட யாரோ ஒருத்தரின் ஜெராக்ஸ் ஐடி இருந்தால் கூட வாங்கிடலாம், இங்கேயும் அப்படி தான் இருந்தது, ஆனால் பாதுக்காப்பை பலப்படுத்த நினைத்து பார்க்க முடியாதளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு என்பது தான் ஆச்சரியம்,அதை விட ஆச்சரியம் அதை செயல்படுத்தி காட்டுகிறார்கள் என்பது தான். கைரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள சிம் நிறுவனத்தின் கிளைகளை தொடர்பு கொண்டு கைரேகை பதித்து விடுங்கள், இல்லை எனில் விரைவில் தொடர்பு துண்டிக்கப்படும்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved