எனது மகள் பல்கலைக்கழகம் செல்ல உதவி செய்யுங்கள் : கண்ணீர் மல்கும் வவுனியா மாணவியின் தாய்!!(காணொளி)

Published On Wednesday, 11 January 2017 | 18:11:00

வவுனியா விபுலாந்தா கல்லூரி மாணவி மனோகரன் அபிராமி 2AB சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஆனாலும் வசதியின்மையினால் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மேற்படிப்பினைத் தொடரமுடியாமல் உள்ளதாக வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் அபிராமி தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவரது தாய் தெரிவிக்கையில்..

2000ம் ஆண்டு யுத்தத்தில் போது கணவரை காணவில்லை எனது இரண்டு பெண் பிள்ளைகளுடனும் வவுனியா வந்தேன். இதுவரை எனது கணவரைக் காணவில்லை

முன்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து மாதாந்தம் 5000ருபா வருமானம் பெற்று எனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றேன். எனது முத்த மகள் மனோகரன் அபிராமி கடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இவர் மேலும் படிப்பினைத் தொடர்வதற்கு என்னிடம் வசதியில்லை. சொந்த வீடு இன்றி வாழ்ந்து வருகின்றேன். எனது மாதவருமானம் சாப்பிடுவதற்கே போதாமையாகயுள்ளது. இதில் எனது மகளை எவ்வாறு மேலும் கல்வி கற்பிக்கப்போகின்றேன் என்று தெரியாமல் இருக்கின்றது.

தந்தையில்லாமல் பிள்ளையினை வளர்த்து வருகின்றேன். எனது பிள்ளை நல்லதொரு உத்தியோகத்தில் வரவேண்டுமேன்று எவ்வளவோ பாடுபட்டேன் எனது பிள்ளையின் கல்விச்செலவுக்கு உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள் எனது பிள்ளையின் கல்விக்கு உதவுகள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இவரின் கல்விச்செலவுக்கு உதவி செய்யவிரும்பினால் நீங்கள் நேரடியாக இவரைத் தொடர்புகொண்டு உதவிசெய்ய முடியும்.

இலங்கை வங்கி வவுனியா கிளை
கணக்கு இல : 71057209
பி.மனோகரன்

தொலைபேசி இலக்கம் : 0773385350


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved