விலைபோகிறது ஸ்ரீ-லங்கன் எயார்லைன்ஸ் - பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Published On Friday, 20 January 2017 | 20:53:00

இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தை கொள்வனவு செய்ய 5.5 பில்லியன் டொலரை முன் வைப்பதாக பீஸ் எயார் விமான நிறுவனம் கூறியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்தள விமான நிலையத்தில் 2.2 பில்லியன் டொலர் முதலீடு செய்வதற்கு தயார் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் காமினி வெதசிங்க கூறியுள்ளார்.
இலங்கை விமான நிறுவனம் இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனம், இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் பயணிகள் போக்குவரத்து செய்கின்றனர்.
இதனை நிர்வகிப்பவர்கள் இந்த நிதியை தவறாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மிஹின் லங்கா மூலம் சுமார் 400 பேருக்கு தொழில் இல்லாமல் போனது.
அவ்வாறு தொழில் இல்லாதவர்களுக்கு நான் மீண்டும் தொழில் வழங்குவேன். அத்துடன் இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved