(வீடியோ) துருக்கி பாராளுமன்றில் இடம்பெற்ற பெண் எம்.பிக்களின் மோதல்.

Published On Saturday, 21 January 2017 | 14:39:00

துருக்கி அதிபர் Tayyip Erdogan-னின் பதவிக்காலம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விவாதத்தின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில், பெண் எம்.பி.க்களிடையே மோதல் ஏற்பட்டது.

துருக்கி அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.

ஆனால், ஜனநாயக அமைப்பை சர்வாதிகார ஆட்சியாக மாற்ற அரசு முயல்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கி அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. அதிபர் Tayyip Erdogan தமது பதவிக் காலத்தை நீட்டித்துக்கொள்ளும் வகையில், இந்த புதிய திருத்தம் அமைந்துள்ளது.

இதனை சட்டமாக்கும் முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, பெண் எம்.பிக்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் எம்.பிக்களின் மோதல் காட்சிகளை இங்கு காணலாம்


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved