அகதிகள் முகாமில் இராணுவம் தவறுதலாக குண்டு வீச்சு! நுற்றுக் கணக்கானோர் பலி!

Published On Wednesday, 18 January 2017 | 16:37:00

தீவிரவாதிகளை தாக்குவதாக கருதி அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற தவறுதலான விமானப்படை தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நைஜிரியாவில் பதிவாகியுள்ளது. 
நைஜிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகளை தாக்குவதாக கருதி அகதிகள் முகாம் மீது அந்நாட்டு  இராணுவ  ஜெட் விமானமொன்று தவறுதலாக குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. 
குறித்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு எதிராக நைஜீரியா இராணுவமும் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 
மேலும் குறித்த தாக்குதலில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த 20 செஞ்சிலுவை சங்க பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களும் பலியாகியுள்ளனர்.
\
கமரூன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள போர்னோ பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது  என அந்நாட்டு இராணுவ தளபதி லக்கி ரப்பார் உறுதி செய்துள்ளார்
குறித்த தாக்குதலை தொடர்ந்து மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நைஜிரிய அரச படை தாக்குதலில் இடம்பெற்ற முதல் தவறுதலான தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved