சாதாரண தரம் எழுதிவிட்டு ஜமாஅத் சென்ற மூன்று மாணவா்கள் மூதூர் கடலில் மூழ்கி வபாத்!

Published On Monday, 23 January 2017 | 15:38:00

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) திருக்கோணமலை - மூதூர் பகுதியில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் மூவர் இன்று (23) காலை அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு மரணமானதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த மாணவர்கள் திகாரிய பகுதியில் இருந்து மூதுர் 7 - ஹதீப் நகருக்கு சமய நிகழ்வுக்காக சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அவர்கள் மூவரும் கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் என ஆரம்ப கட்டவிசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் முதுர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

7 மாணவர்கள் குறித்த சமய நிகழ்வுக்கு சென்றிருந்த நிலையில், 4 பேர் நீராடச் சென்றதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்போது. தன்னுடன் நீராடிய ஏனைய மூவரை காணவில்லை என உயிர் தப்பியவர் கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது. அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் காணாமல் போனவர்கள் தேடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved