Monday, 23 January 2017

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் சாதனை!! விபரங்களுக்கு தொடர்ந்து படிங்க!

கட்டுநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் சரக்கு கையாளும் நடவடிக்கைகளில் சாதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 636 தொன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.8 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தின் ஊடாக இடம்பெறும் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சரக்கு

கப்பல் மாற்றல் தொடர்பான முறைமையின் ஊடாகவே இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாக தேசிய வானுர்தி சேவையின் வர்த்தக அதிகாரி சிவா இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: