வெளிநாட்டு வாழ்க்கையில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன்மார்களே!!!

Published On Friday, 13 January 2017 | 22:40:00

(அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே!) பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் – இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும், தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சி அவரசப்படுகின்றன.

எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அனுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்று கின்றவளிடமும் - பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்.

ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..? 

வாட்ஸ்ஆப்பில் வரும் தகாத வீடியோக்கள் தான் முக்கியக்காரணமான அங்கம் வகிக்கிறது.

ஊரில் இவருடைய மனைவியைப்பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்க வேண்டும் என்ற அவளது ஆசையில் மண்போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது................??????????

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32) 

இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்....................................
ஆக்கம் - வி.களத்தூர் நஜூருதீன்.
(மார்க்கத்தின் உதவியாளன்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved