பக்கவாதம் வருவதற்கு முன் அதன் அறிகுறிகளை எப்படி அறியலாம்?

Published On Monday, 23 January 2017 | 01:03:00

உங்களால் எந்த ஒரு பொருளையும் அழுத்தி பிடிக்க முடியாது. டிவியின் ரிமோட் பட்டனை அமுத்தவோ அல்லது கணிணியில் டைப் செய்யவோ இயலாதபடி தோன்றினால் அது பக்க வாதத்தின் அறிகுறியாகும்.

முகம் வீங்கி, சரியாக சிரிக்க முடியாதபடி உங்களுக்கு தோணினால் மூளைக்கு சரியாக ரத்தம் போகவில்லை என்று அர்த்தம். ஒரு பக்கமாக வாய் கோணுவது போல் தோன்றும்.

உங்களால் சரியாக பேச முடியாது. குழறும். உடலில் ஏதாவது ஒரு பாகம் அசைக்க வேண்டும் என நினைக்கும்போது அசைக்க முடியாது. இந்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களால் ஸ்திரமாக நிற்க முடியாமல் தள்ளாடுவதைப் போல் உணர்ந்தால், அல்லது தலை சுற்றுவது போலிருந்தால் பக்க வாதத்தின் அறிகுறியாகும். சம நிலையிழந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடும்.

தலைவலி அசாதரணமாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு தலை நேராக நிற்க முடியாத அளவிற்கு தலைவலி உண்டாகும். இதற்கு காரனம் ரத்த குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு உண்டாகியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

திடீரென கண்பார்வை குறைந்து மங்கலாக வெளிப்படும் அல்லது கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடலாம். இது பக்கவாதத்தின் தாக்கம் பொறுத்து உங்கள் பார்வையின் திறன் மாறுபடும்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved