குவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம்!

Published On Monday, 23 January 2017 | 18:39:00


குவைத், தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல் மக்வா (Al Maqwa) எண்ணெய் வயலில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் குவைத் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

குவைத் தினமும் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதன் மூலம் உலகின் 6 வது பெரிய எண்ணெய் வள நாடாக திகழ்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட கசிவை தொடர்ந்து தீ பற்றி எரிந்தது மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அல் அஹ்மதியா எண்ணெய் வயலிலும் எண்ணெய் கசிவு விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved