சீனி சாப்பிடுவதை நீங்கள் நிறுத்தினால் என்னநடக்கும் என தெரியுமா..? கட்டாயம் படியுங்கள்!

Published On Tuesday, 17 January 2017 | 12:33:00

சர்க்கரை நாவை அடிமைப்படுத்தும் மிக மோசமான உணவுப் பொருட்களில் முக்கியமானது. பல நோய்களை உண்டாவதற்கு சர்க்கரைதான் காரணம். சர்க்கரையை சாப்பிடுவதை குறைத்தாலே உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு நாம் சாப்பிடும் பழங்கள், காய்கள், பால் ஆகிய்வற்றில் இருக்கும் இயற்கையான சர்க்கரைப் பற்றி சொல்லவில்லை. நாமாகவே உணவுப் பண்டங்களில் சேர்க்கும் சர்க்கரைப் பற்றிதான் இந்த கட்டுரை. அதாவது பிஸ்கட்ஸ், சாஸ், இனிப்பு வகைகள், யோகார்ட் என பலவற்றிலும் சேர்ப்பவை நல்லதல்ல. அப்படியிருக்கும்போது சர்க்கரையை நீங்கள் முழுவதும் நிறுத்தினால் உண்டாகும் நல்ல மாற்றங்கள் எவை தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்
உங்கள் இதயம் : பல்வேறு ஆபத்தான தாக்குதலிலிருந்து உங்கள் இதயம் பாதுகாக்கப்படுகிறது. இன்சுலின் அதிகம் தூண்டபடாத நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய துடிப்பு பல மடங்கு ஆவதும் தடுக்கப்படுகிறது. இதனால் இதயம் பல மடங்கு பலம் பெறுகிறது.      முகப்பரு மற்றும் சரும பிரச்சனை : டீன் ஏஜ் வயதினர் சாப்பிடும் இனிப்புகள்தான் சருமத்திற்கு முதல் எதிரி. முகப்பரு, எண்ணெய்
வடிதல் ஆகியவை இல்லாத சுத்த சருமம் வெளிப்படும். இளம் வயதிலேயே வரும் முதிர்ச்சி தடுக்கப்படும்.      மகிழ்ச்சியாக இருக்கலாம் : சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன தடுமாற்றம் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பவரகளுக்கு உங்கல் மன நிலையில் உள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியடைய வைக்கும்.   
   ஞாபக சக்தி : ஞாபக சக்தி அதிகரிக்கும். ஏனென்ரால் அதிக சர்க்கரை மூளைக்கு செல்லும் தகவ்ல் பரிமாற்ற சங்கிலியை உடைக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் ஞாபக மறதி அடிக்கடி உண்டாகும். நீங்கல் சர்க்கரையை குறைக்கும் போது உங்கள் மூளை செல்கள் பலம் பெறும். நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல் புரியும்.    4 கிலோ உடல் குறையும் : தொடர்ந்து 4, 5 மாதங்கள் சர்க்கரை சாப்பிடாதிருந்தால் உங்கள் எடை 4 கிலோ வரை குறைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் சர்க்கரை ஒரு நாளைக்கு 20 கலோரி அதிகமாக காரணம். இதனாலே உடல் எடை கூடும்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved