உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா? அதை தெரிந்துக் கொள்ள ஒரு நொடி போதுமே

Published On Monday, 23 January 2017 | 18:50:00

ஒருவரின் இதயத் துடிப்பை வைத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி எளிதில் கூறிவிடலாம்.
எப்படியெனில் ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும்.
ஆனால் அதற்கு குறைவான அளவில் இருந்தால், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
ஆய்வின் மூலம் இதய துடிப்பிற்கும், நீரிழிவு நோயிற்கும் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஒரு நொடியில் நீரிழிவு நோய் உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி?
நம்முடைய மணிக்கட்டு அல்லது கழுத்துப் பகுதியில் பெருவிரல் அல்லது ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பின் 15 நொடிகளுக்கு எவ்வளவு முறை இதயம் துடிக்கிறது என்பதை எண்ணி, அதை நான்கால் பெருக்க வேண்டும். மேலும் நமது உடலின் சரியான முறையில் இதய துடிப்பை கணக்கிடுவதற்கு, ஓய்வு நேரத்தை பயன்படுத்த வேண்டும்.
ஆய்வின் மூலம் இதயத் துடிப்பானது, நமது உடல்நலத்தில் நீரிழிவு நோய் உள்ளதா? என்பதை கூறுகிறது.
இது குறித்த ஆய்வின் முடிவில், இதயத் துடிப்பு வேகமாக இருந்தால், அவர்களுக்கு நீரிழிவு நோயின் அபாயம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால் ஒருவரின் இதயத் துடிப்பு பிரச்சனை மூலம் தான் நீரிழிவு நோய் வருகிறதா? என்பது மட்டும் முழுமையாக தெரியவில்லை.
மேலும் நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது, நம்முடைய இதயத்துடிப்பு 85-க்கும் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved