மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவீங்களா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு நிச்சயம்!

Published On Saturday, 21 January 2017 | 14:05:00

மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள் என்பதால் எந்தவொரு சுப காரியத்தை தொடங்கும் போது, மஞ்சள் தடவிய பின்னரே ஆரம்பிக்கப்படும்.
மஞ்சள் ஒரு கிருமி நாசினி, சுபகாரியங்கள் மட்டுமில்லாமல், உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
அப்படி இருக்கும் இந்த மஞ்சளை அன்றாடம் நாம் சமைக்கும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
உணவில் அதிக மஞ்சளை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • நாம் உணவில் பயன்படுத்தும் மசாலாக்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அதற்கு காரணம் அதில் இருக்கும் மஞ்சள். எனவே தங்களின் உணவில் அதிகமாக மஞ்சள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பித்தப்பையில் கற்கள் உருவாகுவதை மஞ்சள் அதிகரிக்க செய்யும் தன்மைக் கொண்டது. மேலும் காஸ்ட்ரோ ஈசோஃபேகில் ரிஃப்லக்ஸ் டிசார்டர் (GERD) போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
  • ஈரல் வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் எந்த வடிவத்திலும் மஞ்சளை தங்களின் உணவில் எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் மஞ்சள் பொடியானது, ஈரல் பிரச்சனையை அதிகமாக மோசமடைய செய்யும்.
  • கர்ப்பிணி பெண்கள் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எனெனில் அது முதிர்சியடைகிற கருப்பை சுருக்கங்கள், கருப்பை ரத்த கசிவு அல்லது வலிமிக்க கருப்பை பிடிப்பு இது போன்ற இடர்பாடுகளை மஞ்சள் ஏற்படுத்துகிறது.
  • சர்க்கரை நோய்க்கு ஓரளவிற்கு மேல் மஞ்சளை சேர்த்துக் கொள்ள கூடாது. எனெனில் இவர்கள் ஏற்கனவே சர்க்கரை நோயிக்கு மருந்து உட்கொண்டு வருவதால், ஹைபோகிளைசீமியா நோயை அதிகப்படுத்துகிறது.
  • ஆண்கள் மஞ்சளை அதிகமாக உட்கொள்வதால் இனப்பெருக்க அமைப்பின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த்தி, விந்தணு உற்பத்தியை குறைக்கிறது.
  • இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மஞ்சளை சாப்பிடுவதால், அவர்களுக்கு மஞ்சளினால் கூடுதல் தாக்கம் இருக்கும். மேலும் ரத்தசோகை உள்ளவர்கள் முற்றிலும் மஞ்சளை தவிர்ப்பது நல்லது.
  • மஞ்சள் ரத்த உறைதல் செயல்முறையை தடுப்பதால், அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த மஞ்சளை முற்றிலும் தொடவே கூடாது. இல்லையெனில் இது மிகவும் ஆபத்தாகிவிடும்.
  • தினமும் அளவுக்கு அதிகமாக மஞ்சளை உட்கொண்டால், நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து, வயிற்று போக்கு, குமட்டல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் மஞ்சள், சில நேரங்களில் அப்படியே எதிர்மறையாக செயல்படும் தன்மையைக் கொண்டது. மேலும் மஞ்சள் சிறுநீரகக் கற்களைக் கூட ஏற்படுத்துகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved