சவூதிக்கு செல்ல இருக்கின்றீர்களா இதை கட்டாயம் படியுங்கள் - இந்த நிலை உங்களுக்கு வரக் கூடாது!

Published On Wednesday, 11 January 2017 | 17:20:00

சவுதியில் செலுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு_எச்சரிக்கையாக இருங்கள் இந்த தமிழ் உறவுகளுக்கு நேரத்த நிலை உங்களுக்கு ஏற்படக்கூடாது:
சமீப காலமாக, தம்மாம் விமான நிலையத்தில் அலோபதி மருந்துககோளடு வந்திறங்கும் பயணிகளிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்து இருப்பின் கைது செய்யப்படுகின்றனர். 

இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு மிக சாதாரணமாக கடைகளில் கிடைக்கும், மற்றும் மருத்துவர்களால் வழங்கப்படும் பல மருந்துகள் சவுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இது புதிதல்ல. ஆனால் இப்பொழுது இது தீவிரமாக தம்மாமில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நம்மவர்கள் பல பேர் தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 வாரமாக விசாரணை கைதியாக இருந்த மூர்த்தி, வெங்கடேஷ் என்பவர் மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் சென்ற வாரம் விடுதலை செய்யப்பட்டார். இதற்காக, மருத்துவ சான்றிதழை, சென்னை தலைமை செயலகம், வெளிநாட்டு அமைச்சகத்தின் முத்திரையுடன் வரவழைக்கப்பட்டது. 

அதில் டெல்லி-சவுதி வெளிநாட்டு அமைச்சக முத்திரை பெற்றால் தான் விடுவிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால், திரு.வாசு, டான்பாவின், சமூக நல செயலாளர், நேரடியாக டெல்லி சென்று ஆவணங்களை பெற்று வந்து சமர்பித்தார். மேலும், மருந்து யாருக்காக வாங்கி வரப்பட்டதோ, அவருக்கு(வயது 65) அந்த மருந்து மிகவும் அத்தியாவசியம் என தம்மாமில் உள்ள மருத்துவரிடம் ஒரு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. திரு. வாசு மற்றும் மூர்த்தியின் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது. சரியான நேரத்தில், நமது தூதரக உதவியோடு சமயோசிதமாக தரு. வாசு செயல்பட்டதால் மிகப் பெரிய தண்டனை காலத்தில் இருந்து அன்பர் மூர்த்தி வெங்கடேஷ் காப்பற்ற பெற்றார்.ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்கள் இந்த செய்தியை முயன்ற அளவு நம்மவர்களுக்கு கொண்டு செல்ல கேட்டுக் கொள்கிறோம். 

அத்தியாவசிய மருந்துகளை கொண்டு வருபவர்கள், தங்கள் மருத்துவரிடம் நிலைமையைக் கூறி தங்களுக்கு வழங்கப்பட்ட மருந்தில் தூக்கம், மயக்கம் (steroid) தரக்கூடிய மருந்துகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். ஏறக்குறைய மூர்த்தியைப் போல 80 இந்தியர்கள் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே நிலைமையில் சிக்கிய இந்தியர்கள் சவுதியில் கைது செய்யப்பட்ட செய்தி Kuwait-தமிழ் பசங்க பதிவு செய்தது நினைவிருக்கலாம்.

சவுதி மட்டும் இல்லை குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இதே நிலைதான்  வாழும் நாட்டில் உள்ள சட்டத்தை மதிப்போம். மகிழ்ச்சியாக இருப்போம். அனைத்து மக்களுக்கும் உதவுவோம்.

செய்தியை அனுப்பி வைத்த சந்துரு மருதப்பனுக்கு நன்றிகள்.
Reporting by:Kuwait-தமிழ் பசங்க


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved