கேப்சி உணவிலிருந்த அருவறுக்கதக்க பொருள்: அதிர்ச்சியில் உறைந்த காதலர்கள்

Published On Monday, 23 January 2017 | 18:48:00

பிரித்தானியாவில் கேப்சி உணவில் அருவறுக்கதக்க பொருள் இருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் சிம்ப்சன் என்ற 22 வயது இளைஞன் தனது காதலி ஷெர்லியுடன் Suffolk, Ipswich பகுதியில் உள்ள கேப்சி உணவக கிளைக்கு சென்றுள்ளார்.
இருவரும் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது உணவில் அலகுடன் கோழி மண்டையோடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜோர்டான் சிம்ப்சன், என் தாத்தா பறவை ஆர்வலர் அவரிடம் அந்த பாகத்தை கொடுத்து சோதனை செய்தோம். அதில், அது அலகுடனான கோழியின் மண்டையோடு என உறுதியானது.
இது மிகவும் அருவறுக்கதக்க விடயம். இதன் மூலம் உணவகத்தின் தரத்தை நான் உணர்ந்துள்ளேன். இனி குறித்த கிளை மட்டுமின்றி எந்தவொரு கேப்சி உணவகத்திலும் சாப்பிடமாட்டேன் என முடிவு செய்துள்ளளேன் என தெரிவித்துள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved