Breaking News

காலி கடலில் குளிக்க சென்ற பிரித்தானிய பிரஜைக்கு நடந்த சோகம்!

ஹிக்கடுவை பகுதி கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தொடன்துவ, பட்டுவத்த கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
54 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழ்ந்தவர் சுற்றுலா பயணத்திற்காக வருகைத்தந்து பட்டுவத்த பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று கடலில் குளிக்க சென்ற போது குறித்த நபர் அலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். எனினும் பிரதேச மக்கள் அவரை காப்பாற்றி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments