உங்களுக்கு மூக்கு எப்படி உள்ளது? அதற்கான அர்த்தம் என்ன தெரியுமா?

Published On Saturday, 14 January 2017 | 13:09:00

ஒருவருடைய மூக்கை வைத்தே அவருடைய குணாதிசயங்களை சொல்லி விடலாம்.

பெரிய மூக்கு
ஒருவரின் மூக்கு பெரியதாக இருந்தால், அவர்களுக்கு அதிக வலிமை, இயக்கம், தலைமை, ஈகோ மற்றும் தனிப்பட்ட முறையில் பணியாற்றும் விருப்பம் போன்ற குணங்கள் இருக்கும். மேலும் இவர்களுக்கு கட்டளையிட்டால் பிடிக்காது. தங்களுக்கு தாங்களே முதலாளியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.

சிறிய மூக்கு
சிறியதாக ஒருவருக்கு மூக்கு இருந்தால், அவர்கள் ஆக்கப்பூர்வ கற்பனைகள் மற்றும் சிறந்த தன்னிச்சையான இயல்புகளைப் பயன்படுத்தக்கூடிய குழு சார்ந்த நடவடிக்கைகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சில நேரங்களில் இவர்கள் பொறுமையை இழந்து, அதிக கோபத்தை அடைவார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களை பற்றி அதிகமாக சிந்திப்பார்கள். இதனால் இவர்கள் அடுத்தவர்களின் நன்மைக்கு உதவுவார்கள்.

நீண்ட மூக்கு
சிலருக்கு மூக்கு நீளமாக இருக்கும். அப்படி இருந்தால், அவர்கள் நல்ல வணிக ஆற்றல், இலட்சியத்தைப் பற்றிய உயர்வான சிந்தனைகள், சிறந்த உள்ளுணர்வுகள் போன்ற குணங்களை கொண்டவர்கள். மேலும் இவர்களின் தலைமைக்கு மற்றவர்கள் நேர்மறையான வகையில் ஒத்துழைப்பார்கள்.

குட்டையான மூக்கு
முக்கு குட்டையாக இருந்தால், இவர்கள் விசுவாசம் மற்றும் மற்றவர்களின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய லட்சியத்தில் சற்று பின்தள்ளியே இருப்பார்கள். மற்றவர்களிம் ஏதேனும் போட்டியான நிலைகளில் உணர்வு ரீதியான வலிமைகள் இவர்களுக்கு இருக்காது. கடுமையான ஈகோ மற்றும் பொறாமை குணத்தைக் கொண்டவர்கள்.

நேரான மூக்கு
நேராக இருக்கும் மூக்கை, கிரேக்க மூக்கு என்றும் கூறுவார்கள். இவர்கள் மூக்கின் நாசித்துளைகள் குறுகலாக இருக்கும். மேலும் அது மற்றவர்களை ஈர்க்கத்தக்க வகையில் இருக்கும். மேலும் இவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், உதவும் குணத்துடனும், வாழ்க்கையின் வெற்றிக்கு தொடர்புடைய சீரான கட்டுப்பாட்டை இவர்கள் காண்பிப்பார்கள்.

மேல் பக்கம் திரும்பிய மூக்கு
நீண்ட, வளைந்த, நுனியில் லேசாக மேல்நோக்கி, குழிவான சாய்வை கொண்ட மூக்கை உடையவர்கள், நம்பிக்கை கொண்டவர்களாகவும், அன்பானவர்களாகவும், நல்ல குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களின் மீது அன்பான, ஆதரவு அளிக்கின்ற மற்றும் ஊட்டமளிக்கும் வகையில் இருப்பார்கள்.

கொக்கி வடிவிலான மூக்கு
கொக்கி வடிவில் மூக்கை கொண்டவர்கள், பெரிய மூக்கை கொண்டவர்களின் ஒருசில குணத்துடன் ஒத்துப் போவார்கள். மேலும் இவர்களுடன் சுலபமாக பழக வேண்டும். மேலும் பருந்து போன்று கொக்கி வடிவில் மூக்கை கொண்டவர்கள் எப்போதும் தங்கள் சொந்த பாதையை பின்பற்றுவார்கள்.

ரோமானிய மூக்கு
ரோமானிய மூக்கை கொண்டவர்கள் பலசாலியாகவும் லட்சியவாதிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் மிகப்பெரிய தலைவர்களாகவும், ஆளுமை திறமையும் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் முடிவுகள் எடுப்பதில் அவசரப்பட மாட்டார்கள். இதனால் இவர்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வார்கள்.

அலை போன்ற மூக்கு
மூக்கின் நுனியில் அலை போன்ற புடைப்பு இருப்பதால் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் இத்தகைய மூக்கு. அதே போல் நுனி பெரிதாக காணப்படும். இவர்கள் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை விரும்பும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved