நடப்பு ஆண்டு இறுதிக்குள் 'பறக்கும் கார்': ஏர்பஸ் விமான நிறுவனம் அறிவிப்பு

Published On Wednesday, 18 January 2017 | 11:35:00


நடப்பு 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதலாவது பறக்கும் கார் சோதனைக்கு தயாராகிவிடும் (Airbus could fly a demonstration vehicle for single-person transport by the end of the year) என ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாம் என்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்து நெரிசல், புகை மாசு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடு, நகர உள்கட்டுமானத் திட்டத்தில் சாலை மற்றும் பாலங்களுக்கான செலவினங்களை குறைத்தல் போன்ற நன்மைகளை கருத்திற்கொண்டு தற்போது ஒருவர் மட்டுமே சுயமாக இயக்கி பயணம் செய்யும் வகையில் (Prototype for a self-piloted flying car) வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தரையில் ஓடும் காரிலேயே இளைஞர்கள் கண்ணைக்கட்டிக் கொண்டு பறக்கும் நிலையில் இதையும் பொறுத்திருந்து பார்ப்போம், பறக்கும் கார் வரமா? சாபமா?

Source: Gulf news
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved