தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்!(வீடியோ)

Published On Saturday, 14 January 2017 | 18:58:00

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், மேலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 15க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இந்த போட்டியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு, கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை மாவட்டம், மேலூர் அருகே மில்கேட் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 15க்கும் மேற்பட்ட காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளன. அரிட்டாபட்டியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நொண்டிக்கோயில்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதனிடையே, வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி எருதுகளுடன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved